சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று (26) நடைபெற்றுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை கண்டறியும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள், இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
மின்சார திருத்தம், கலால் சட்டம் உள்ளிட்ட திறைசேரி தொடர்பான இந்த கலந்துரையாடல்களுக்குத் தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் திங்கட்கிழமை தகவல்களை வழங்குவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் மற்றுமொரு கலந்துரையாடல், எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.