Our Feeds


Saturday, August 27, 2022

ShortNews Admin

அரச நிறுவனங்களில் விரைவில் ஆட்குறைப்பு?: அமைச்சர் அதிரடி



அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.


அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை ஆகியனவே வழிவகுத்தாகவும் சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
பெரும்பான்மையான அரச பணியாளர்கள் தனியார் துறையில் தப்பிப் பிழைப்பார்கள் அல்லது பணியமர்த்தப்படுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும் செயல்திறன் அடிப்படையிலான சம்பளம் அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றில் திறமையான பணியாளர்கள் இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் திறமையற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம்  என்பவற்றில் 4200 பேருக்கு பதிலாக 500 பேராலும் மின்சார சபையில் உள்ள 26,000 பணியாளர்களில் பாதிப் பேராலும் திறமையாக பணியாற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திறமையற்ற உறுப்பினர்களால் தொழிற்சங்கங்கள் வளர்கின்றன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »