பல கோடி ரூபாவை செலவிட்டு, வெளிநாட்டு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்வதற்கு தயாரான ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் 7 பேரின் பயணத்தை தடை செய்ததாக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுண ரணதுங்க தெரிவிக்கின்றார்.
கண்டி – மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றதை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அர்ஜுண ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் கடமையாற்றும் 7 அதிகாரிகள், வெளிநாட்டு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும், அவர்கள் விமானத்தின் வியாபார வகுப்பில் செல்வதற்கு தயாராகியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
வெளிநாட்டு பயணத்தின் போது, குறித்த அதிகாரிகள் அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு தயாராகியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பயணத்தின் போது, குறித்த அதிகாரிகளுக்கு நாளொன்றிற்கு சுமார் 650 டொலர் செலவிடவிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், தேசிய விளையாட்டு சபை, அதற்கான அனுமதியை வழங்கவில்லை எனவும் அர்ஜுண ரணதுங்க கூறியுள்ளார். (ட்ரூ சிலோன்