நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 பேர் தங்களது நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொது நிர்வாக அமைச்சின் ஊடாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
இதற்காக அவர்கள் ஒரு கோடியே 30 லட்சம் ரூபா பணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறியப்படுத்தியுள்ளது.
இதற்கமைய குறித்த அமைச்சின் செயலாளரினால் இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.