மேலதிகமாக உள்ள எரிபொருளை எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இன்று மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள், தரையிறக்குவதில் உள்ள தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடான முற்பதிவுகளுக்கான கட்டண செலுத்துகையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் வரிசைகள் தோன்றியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 02 நாட்களுக்குள் எரிபொருள் வரிசையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் கூறினார்.