நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.