இரண்டாம் இணைப்பு
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.
19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களாக ரவிந்திர ஜடேஜா மற்றும் விராத் கோஹலி ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றனர்.
ஹத்திரிக் பாண்டே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்று, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
முதலாம் இணைப்பு
2022 ஆசிய கிண்ணம் :- பாகிஸ்தான் இந்தியாவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு?
டுபாயில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ணப் போட்டிகளில், இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் 43 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டார்.
இதன்படி, இந்திய அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.