ஜேர்மனி நோக்கிச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை கிடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துருக்கியைச் சேர்ந்த சன் எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் விமானம் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகருக்கு சென்றுக் கொண்டிருந்தது.
அதில் வழங்கப்பட்ட உணவில் காய்கறிகளுக்கு இடையில் பாம்பின் தலை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணிப்பெண், வீடியோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார்.