Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவும் அரசாங்கத்துடன் கூட்டு சேராமலிருக்கவும் SJB கூட்டணி தீர்மானம்

 

பேராட்டம் நடத்தும் உரிமைகளை முடக்கும் நோக்கத்திற்கான அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கும், அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதற்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை (26) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கூடின. இதன் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,

கருத்துத் தெரிவிக்கும் உரிமை,  போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் குழு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »