யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்குச் சென்று வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவருக்கு கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 50,000 கனேடிய டொலர்களை வென்றுள்ளார்.
ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசையே வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், அந்த பணத்தில் கார் கொள்வனவு செய்துள்ளதுடன் தனது பிள்ளைகளை கல்விக்காக பணத்தை செலவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.