இஸ்மத் மவ்லவிக்கு 5ம் திகதி வரை விளக்கமறியல்.
நேற்றைய தினம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட இஸ்மத் மவ்லவி என்பவரை அடுத்த மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பிலேயே CCD யினால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.