Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு
பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் நாளை (31) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.