கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்று (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்த அவர் வாக்குமூலத்தை வழங்கியிருந்த நிலையில், அதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நின்று இடப்பட்டிருந்த வீதித் தடைகளை உடைத்து அந்த இடத்தில் இருந்த மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.