காவத்தை-எந்தானை-நாவலகந்த பிரதேசத்தில் மாணிக்கல் அகழ்வில் ஈட்பட்டிருந்த ஒருவர் குழியில் பொறுத்தப்பட்டிருந்த இரும்பு தூண்களுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
எந்தானை உதுரு பனாபிட்டியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான லியனகே முத்துகுமார (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காவத்தை எந்தானை நாவலகந்த பிரதேசத்தில் மாணிக்கல் அகழ்வில் 11 பேர் ஈட்பட்டிருந்ததாகவும், குழியில் பொறுத்தப்பட்டிருந்த இரும்பு தூண்களுக்குள் இருவர் சிக்கியதையடுத்து குறித்த தூண்களை வெட்டி இருவரையும் மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மற்றைய நபர் காவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.