பலாங்கொடை தாமஹன பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் மண்வெட்டிகளால் வேலை செய்து கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் ஏனைய மூன்று பெண்களும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரணமடைந்தவர் இதே பிரதேசத்தில் நுகஹேனவத்த பகுதியில் வசித்து வந்த 26 வயதையுடைய இரண்டு குழந்தைகளின் தாய் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.