எரிபொருள் பெற்றுக்கொண்டு பொது போக்குவரத்து சேவையில் இயங்காத தனியார் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊடாக நாளாந்தம் சுமார் 5,000 பஸ்கள் எரிபொருள் பெறுகின்ற போதிலும் அவற்றில் சுமார் 30 வீதமானவை உரிய முறையில் இயங்காது எரிபொருள் விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.