Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

ரணிலின் இடத்திற்கு வஜிர – நாளை சத்தியப்பிரமாணம்.

 

நாடாளுமன்றம் நாளை (27) முற்பகல் 10 மணிக்குக் கூடவுள்ளது. இதன்போது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்பில் பிற்பகல் 4.30 வரை விவாதிக்கப்பட்டவுள்ளது.

கடந்த ஜூலை 17 ஆம் திகதிய 2288/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், அப்போதைய பதில் ஜனாதிபதியினால் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

சட்ட விதிகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம், 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் அது இரத்தாகிவிடும்.

இலங்கையில் பொது அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்குப் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதால், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

அந்த வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, வஜிர அபேவர்தன நாளை நாடாளுமன்ற உறுப்பினராகப் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »