பிபில-யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவரிடம் இருந்து 23 இலட்சத்து 30,600 ரூபாவை மோசடி செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
32 வயதான குறித்த ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 லட்சத்து 30,600 ரூபாவை காப்புறுதி நிறுவன முகாமையாளர் குறித்த ஆசிரியையிடம் இருந்து பெற்றுகொண்டுள்ளார்.
ஆசிரியருக்கு தெரிந்தே கடன் அட்டையை பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
காதலன் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.