கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி, அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.