காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும்
ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி நேற்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்தார்.
மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தை கையளிப்பதாக உறுதியளித்த போதிலும்இ போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆயுதப்படைகளை பயன்படுத்தினார்.
ரணிலை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அனுரகுமார குறிப்பிட்டார்
‘காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது,
பல்வேறு இன்னல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றாக்குறையால் உருவான பொதுமக்களின் போராட்டத்தின் காரணத்தை அரசாங்கம் உணரவில்லை.
எனினும் அடக்குமுறை மூலம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கிறது என்று அவர் குற்றம் சுமத்தினார்.