நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு சட்டத்தை நிலைநாட்டாமல் அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு சேதம் ஏற்படுத்தியதாக இளைஞர்களை தேடிப்பித்து வழக்கு தொடுப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
அத்துடன் அவரசகால சட்டத்தை அமுல்படுத்தி இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க முற்பட்டால் அது பாரிய அழிவுக்கே நாட்டை இட்டுச்செல்லும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (27) இடம்பெற்ற அவசரகால சட்டத்துக்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்து அரசாங்கம் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.
அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 2018இல் 52நாள் அரசாங்கத்தின்போது இந்தச் சபையில் அரச சொத்துக்களுக்கு சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டவில்லை.
அதனால் நாடாளுமன்றத்துக்கு வெளியில் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு போராடுவதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறேன் என தெரிவித்தார்.