இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கோவிட், டெங்கு தொற்று அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் எனவும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.