Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

மஹர சிறைச்சாலை வளாக பள்ளிக்கு அனுமதி மறுப்பு


 சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக மூடப்­பட்­டுள்ள, மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலை அப்­பி­ர­தே­சத்தில் வேறோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்  திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.


100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல்  சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்டு புத்தர் சிலை­யொன்றும் அங்கு வைக்­கப்­பட்டு 2020 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி திறந்து வைக்­கப்­பட்­டது.


பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து பள்­ளி­வா­சலை மீள பெற்­றுத்­த­ரு­மாறு அப்­ப­குதி முஸ்­லிம்கள் விட­யத்­துக்குப் பொறுப்­பான  அமைச்­ச­ரி­டமும்  அரச தலை­வர்­க­ளி­டமும் கோரிக்­கை­வி­டுத்தும் பலன் ஏற்­ப­டாத நிலை­யிலே பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.


பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்ள கம்­பஹா அர­சாங்க அதி­ப­ரிடம் அரச காணி­யொன்­றினைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ­ருடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் தெரித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், அரச காணி­யொன்­றினைப் பெற்றுக் கொள்ள முடி­யா­மற்­போனால் தனியார் காணி­யொன்­றினை கொள்­வ­னவு செய்­வது தொடர்­பிலும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.


மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வா­சலின் அப்­போ­தைய நிர்­வாக சபை மற்றும் அப்­ப­குதி மக்­க­ளுடன் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது என்றார்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வாசல் மூடப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்­வாவை, அப்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா  தலை­மையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­தை­ய­டுத்து அமைச்சர் பள்­ளி­வா­சலை மீண்டும் முஸ்­லிம்­க­ளிடம் கைய­ளிக்­கு­மாறு அப்­போ­தைய  சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். என்­றாலும்  அவ­ரது உத்­த­ரவு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.


மஹர சிறைச்­சாலை வளா­கத்தின் பள்­ளி­வாசல் 1903 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாகும். 1902 இல் மஹர சிறைச்­சா­லையில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக மலே இனத்­த­வர்­களே கட­மை­யாற்­றி­னார்கள். அவர்கள் தங்கள் சம­யக்­க­ட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இப்­பள்­ளி­வாசல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. பள்­ளி­வாசல் 1967 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சிறைச்­சாலை நிர்­வாகம் பாது­காப்பு கார­ணங்­க­ளைக்­கூறி பள்­ளி­வா­சலை மூடி அவர்­க­ளது ஓய்வு அறை­யாக மாற்­றிக்­கொண்­டுள்­ளது.


மஹர சிறைச்­சா­லையை அண்­மித்து வாழும் முஸ்­லிம்கள் தங்­க­ளுக்­கென புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணித்து தரு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களைக் கோரியுள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »