Our Feeds


Friday, July 22, 2022

SHAHNI RAMEES

குழப்பநிலையிலிருந்து விடுபடும் வரை சர்வதேச நாணயநிதியம் உதவி வழங்காது

 

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடும் வரை சர்வதேச நாணயநிதியத்தின் உதவி அந்த நாட்டிற்கு கிடைக்காது என ஜோன் ஹெப்ஹின்ஸ் பல்கலைகழக பேராசிரியர் டெபோரா பிராவுட்டிகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய குழப்பநிலையிலிருந்து மீளவேண்டும் அதன் பின்னரே சர்வதேச நாணயநிதியம் உதவ முன்வரும் என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார்.

 
நிலவரம் தொடர்ச்சியாக குழப்பமானதாக காணப்படும்போது சர்வதேச நாணயநிதியம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடியாது என தெரிவித்துள்ள அவர் ஆகவே அரசாங்கம் ஸ்திரதன்மை பெறும்வரை அவர்கள் நிதியமைச்சர் ஒருவரை நியமிக்கும்வரை சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எவருமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம்திருப்பி கிடைக்காது என கருதவேண்டிய நிலை காணப்பட்டால் சர்வதேச நாணயநிதியம்  நிதிஉதவி செய்யாது என அவர் தெரிவித்துள்ளார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »