நாடாளுமன்றில் சபை முதல்வராக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நியமிப்பதற்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் தீர்மானித்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபை முதல்வராக செயற்பட்ட தினேஸ் குணவர்தன அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக செயற்பட்ட சுசில் பிரேமஜயந்த கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.