பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன்
தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு சந்தேக நபர் ஒருவர் தங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்கேத நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரு துவிச்சக்கர வண்டிகள், குளிர்சாதன பெட்டியொன்று உள்ளிட்ட மேலும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரதன பிரதேசத்தில் கைதானவருக்கு 28 வயது என்பதோடு, ஏனைய இருவரும் 22 மற்றும் 30 வயதுடைய தங்கல்ல, நெட்டோல்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்கள் இன்று தங்கல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.