Our Feeds


Friday, July 15, 2022

Anonymous

ஜனாதிபதி கொடியை இரத்து செய்தார் ரணில் – ‘அதிமேதகு’ என்ற பதத்துக்கும் தடை.

 



நாம் வாழ்வதற்கும்,  அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.”


இவ்வாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், அதிமேதகு என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன். (ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை)


நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும். ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படுகின்றது.


நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன். அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட தயாரில்லை.


அடுத்த வாரம் தெரிவாகும் புதிய ஜனாதிபதிக்கு ’19’ ஐ விரைவில் முன்வைக்க கூடியதாக இருக்கும்.


போராடும் உரிமை உள்ளது. வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.


நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.” – என்று குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »