கொழும்பு -08 பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல் வீதி பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் ஒன்றிலிருந்து பெற்றோல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை மற்றைய நபர் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலை இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை காசல் வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் 29 வயதுடைய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.