” மக்களை ஒடுக்கும் இந்த அரசுடன் எமக்கு கொடுக்கல், வாங்கல் இல்லை. அரசில் இணையமாட்டோம். அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்ற குழுக்களில் தலைமைப்பதவிகளை ஏற்பதற்கு தயார். அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிரணியில் இருந்து ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் சஜித் குறிப்பிட்டார்.