இன்று (28) நள்ளிரவு தொடக்கம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஓகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.