பண்டாரவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த , பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், வங்கி அட்டை, அடையாள அட்டை , சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஒரு 142, 370 ரூபா பணம் என்பவற்றை பண்டாரவளை – ஹில்ஓயா பிரதான வீதியில் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணி புரியும் பண்டாரவளை வெலிபன்ன, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சாமிலா (6761) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே, வீதியில் கிடந்த இவற்றை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உரிமையாளரை கண்டுபிடித்து பணம் மற்றும் அவரது அனைத்து உடைமைகளையும் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கு கெளரவத்தை ஏற்படுத்துவதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.