Our Feeds


Tuesday, July 19, 2022

SHAHNI RAMEES

ரெட்டா உள்ளிட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணம் என்பது பொய் என நிரூபணம்!

 

காலி முகத்திடல்  அனைத்துக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் பிரபலமான  செயற்பாட்டாளர்களாக அறியப்படும் ரெட்டா எனும்  ரனிந்து சேனாரத்ன,  டிலான் சேனநாயக்க, அவிஷ்க விராஜ் கோனார ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும்  இலங்கை வங்கியின் மூன்று வங்கிக்கணக்குகளில் 450 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது   தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில்,  இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களில் அவ்வாறான பண வைப்பொன்று இடம்பெறவில்லை என சிஐடியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு  எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, விடயத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி, வெளிநாட்டிலிருந்து போராட்டக் காரர்கள் மூவரின் மக்கள் வங்கி – யூனியன் பிளேஸ் கிளையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு தலா 150 இலட்சம் ரூபா வீதம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அவர்கள் வைப்புச் செய்யப்பட்டதிலிருந்து ஒரு மணித்தியாளத்துக்குள்  வெள்ளை நிற ப்ரியஸ் ரக மோட்டார் வாகனத்தில் வந்து, வங்கி ஊழியரையும் அச்சுறுத்தி பெறுறுச் சென்றதாக சமூக வலைதலங்களில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இது குறித்து விசாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகள் சிஐடி.யினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »