Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

சீனாவுக்கு செல்ல தயாராகும் ஜனாதிபதி..!

 

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என்று கொஹன தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது என எதிர்பார்ப்பதாகவும் கொஹொன கூறியுள்ளார்.

பல மாதங்களாக சீனாவிடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் இந்த நிதி உதவி குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் அடுத்த சந்திப்புக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று கொஹேன குறிப்பிட்டுள்ளார்.

நிதி உதவிக்கு அப்பால், எரிபொருள், உரம் மற்றும் பிற அவசரத் தேவைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் சீனா உதவ முடியும் என்று இலங்கை நம்புவதாக கொஹொன குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »