புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிராக போராடும் மக்களுக்கு தான் ஆதரவு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.மக்கள் எழுச்சியானது எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது எனவும், இதனால் ராஜபக்ஷக்கள் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதனை ஜனாதிபதி புரிந்து கொண்டு கையாள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், போராட்டக்காரர்களை குற்றம் சாட்டும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
மக்கள் சக்தியை ஆயுத பலத்தால் ஒருபோதும் அடக்க முடியாது. இந்த மக்கள் சக்திதான் ராஜபக்சவை உயர் பதவிகளில் இருந்து விரட்டியது. இதை ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும். ரணிலுக்கு எதிராக வெறும் தலையுடன் போராடும் மக்களுக்கு தனது முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன்" என்றார்.