தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக
கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை. அவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் என்று இந்த அரசு சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடக்கிறது. அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இப்போது தமிழ் சிங்கள மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள். இந்தச் சட்டத்தால் தமிழ் மக்கள் மட்டும் அல்ல சிங்கள மக்களும் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.