கொழும்பு காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திரன இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
காலி கோட்டையைச் சேர்ந்த அஹமட் நிஸ்வர் என்ற சந்தேக நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.