கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு
முதல் நாளை காலை வரை நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.
இதன்படி இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 8 மணி வரை, கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.