சர்வ கட்சிகள் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.