நாட்டின் அன்றாட விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் செயற்பாடு இடம்பெறாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தினேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்றதன் பின்னர் கொஸ்கம, பொரலுகொடவில் அமைந்துள்ள தனது தந்தை பிலிப் குணவர்தனவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த நேற்று (29) பிற்பகல் சென்றிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
கேள்வி - உலக வங்கியுடனான பரிவர்த்தனையின் போது தற்போதைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? இது குறித்து உலக வங்கி தனி அறிக்கையை வெளியிட்டிருந்தது.
"நாங்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருகிறோம். உலக வங்கி ஏற்கனவே அவசர உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தேவையான பலத்தை படிப்படியாக உருவாக்கி வருகிறோம்."
கேள்வி - போராட்டத்தை நசுக்கவே அவசரகாலச் சட்டத்தைக் கையிலெடுத்ததாகக் குற்றம் சுமத்தப்படுகிறது?
"அவசரகாலச் சட்டத்தின் ஊடாக நமது அன்றாட சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவதில்லை."
கேள்வி - போராட்டக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன?
"அவர்களின் சொந்த அமைப்புகள் செய்திகளை வழங்கிக் கொண்டுள்ளன.