2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.