Our Feeds


Saturday, July 30, 2022

SHAHNI RAMEES

கடிதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் – தபால் திணைக்களம்..!

 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடிதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் முறையாக கடமைக்கு சமூகமளிக்காததால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டு தபால் கட்டணங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் திருத்தியமைக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் கடந்த 19ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »