தற்போது இருப்பவர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லவெனவும், அராஜகவாதிகள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது என கூறிய வீரவன்ச, ரணிலிடம் அமைச்சு பதவி வேண்டாம் எனவும் தனது அரசு வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலட்சக்கணக்கான மக்களின் நியாயமான தூண்டுதலுக்கு மதிப்பளிக்காமல், அரசை அழிப்பதற்காக மக்கள் அழுத்தத்தை பிரயோகிப்பதாகவும் விமல் வீரவன்ச எம்.பி. குறிப்பிட்டார்.
எவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இக்கட்டான தருணத்தில் அரசை கவிழ்க்கும் சதியில் இருந்து அரசை காப்பாற்ற வேண்டும் எனவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை கையகப்படுத்துவது அமைதியானதா என கேள்வி எழுப்பிய வீரவன்ச, இலங்கை இராணுவத்தின் அமைதியை கோழைத்தனமாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.