முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற ஒருவருக்கும் அங்கிருந்த பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதான இவர் நேற்று முன்தினம் (25) பொலிஸாரின் தாக்குதலினால் உடலில் 15 இடங்களில் காயங்களுடன் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர் பாணந்துறை மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பாணந்துறை வைத்தியசாலை பொலிஸாரிடமும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.