போராட்டகளத்தில் தற்போது உள்ளவர்கள் பைத்தியக்காரர்களும் போதைக்கு அடிமையானவர்களுமே என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி மாளிகையில் உள்ள புராதன புகைப்படங்களில் கையொப்பமிட்ட குழுவினரிடம், இந்த நாட்டுக்கு எவ்வாறான விடுதலை கிடைக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்கள் முழு மனதுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் போராட்டக்காரர்களிடமிருந்து நாகரீகமற்ற நடத்தையை அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
போராட்டக்காரர்களின் வெறித்தனமான நடவடிக்கைகளைக் கண்டு மக்கள் இப்போராட்டத்தில் சோர்வடைந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கீழ்த்தரமாக நடத்தியதாகவும் அவர் கூறினார்.