விபத்தில் படுகாயமடைந்த இரு யுவதிகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் கிராசியன் பிரிவைச் சேர்ந்தவர்.
கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் நேற்று (28) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.