Our Feeds


Monday, July 25, 2022

SHAHNI RAMEES

நாங்கள் ஆளும் தரப்பு அல்ல எதிர்தரப்பு - ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணித்த வாசுதேவ நாணயக்கார கூட்டனி

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்துள்ளோம். நாங்கள் ஆளும் தரப்பு அல்ல எதிர்தரப்பினராவோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



 

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை கிடையாது ஆகவே ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »