பொதுப் போக்குவரத்து சேவைகள்
மற்றும் பாடசாலை வாகனங்கள் ஆகியவற்றை இன்று முதல் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபை ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்ட எரிபொருள் இரண்டு நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமைந்திருக்கும் என பாடசாலை வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். (a)