ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில விசாரணைகளுக்காக மேல் மாகாண பிராந்திய அலுவலக அதிகாரிகளை கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என்றும் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சேத மதிப்பீடுகள் தொடர்பில் பகிரப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைவாக, ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் சேத விவரங்கள் தொடர்பில் தயாரிக்கப்படும் அறிக்கையானது ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.