சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு
ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.இன்று (29) காலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.