Our Feeds


Thursday, July 14, 2022

Anonymous

ஜூலை 9ஆம் திகதி இணங்கியது போல் செயற்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – SLPP, MP டலஸ்

 



அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜுலை 9ஆம் திகதி ஏற்றுக்கொண்டவாறு செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 9ஆம் திகதி இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், உடனடியாக புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், பின்னர் ஒப்புக்கொண்டபடி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை ஒத்திவைப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையலாம் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், இலங்கை “நீதியற்ற அராஜக நாடாக” மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »